Friday, September 5, 2008

My favorurite lyric which I wrote




என் நெஞ்சில் குடி ஏறும்போது , உன் நெஞ்சம் எனை ஏற்குமோ
என் கண்ணில் அலையாடும் தவிப்பு , உன் மனதில் கரை சேருமோ

நான் இங்கு படுகின்ற அவஸ்தை , சுவடழிந்து இனி மறையுமோ
உன் மனதில் நான் இல்லை எனினில் , உணகின்று ஆனந்தமோ

கண்ணிரண்டும் இமைக்காமல் பார்த்து , என் இதயம் சிதைந்தோடுதே
கன்னி உந்தன் தீராத வெறுப்பு , காண்கையிலே அச்சுறுத்துதே

கனியும் என்று காத்திருந்த போது , கல்லானதோ உன் இதயமே
இனி ஒரு வார்த்தை நீ பேச மறுத்தால் இல்லை இனி ஓர் உதயமே

சிறு பார்வை நீ இன்று பார்த்தால் , கரைந்தோடும் என் எண்ணமே
ஒரு வார்த்தை நீ இன்று விளித்தால் , மனம் முழுதும் பூ வண்ணமே
If someone is aware of the tune of Ilayaraja's Mood Kapi - Italian Orchestra...
try singing this in that tune...
You can find it better...

No comments: